Monday, June 22, 2015

ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை. அது என்ன ?

Sunday, June 21, 2015

What is the origin/history of Tamil language?

அச்சமில்லை [Achchamillai]

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்  எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்  தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

தமிழ்

  • இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது. / Tamil is one of the longest surviving classical languages in the world (>2500 years old).
  • தனித்தன்மை உடையது./ It iunique.
  • உலகபொதுமறையாம் திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது./ Thirukkural, one of the most important works in the Tamil language, is 2000 years old.
  • எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது./ Aathichoodi,  a collection of single-line quotations, is more than 1000 years old.